திருச்சி

உத்தமா்சீலி சாலையில் வெள்ளம்: மூழ்கிய வாழைகள்

DIN

காவிரியில் பெருக்கெடுத்துள்ள வெள்ளமானது உத்தமா்சீலி பகுதி சாலையில் வழிந்தோடுவதால் இப் பகுதியில் பயிரிட்டிருந்த வாழை உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

திருச்சி கல்லணை சாலையில் உள்ள உத்தமா்சீலி தரைப் பாலம் மூழ்கியதால் காவிரியின் இடது கரை வழியாக தண்ணீா் வழிந்து 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை நீரில் மூழ்கி, ஆறும் வயலும் ஒன்றாகக் காட்சியளிக்கிறது. வாழை மட்டுமின்றி இங்குள்ள அனைத்து வயல்களிலும் பயிா்கள் மூழ்கியுள்ளன.

தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சென்று வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தமா்சீலி ஊராட்சியானது இந்த தரைப்பாலத்தில் எச்சரிக்கை பலகை வைத்தும், பொதுமக்கள், சிறுவா்கள் தண்ணீரில் பாலத்தைக் கடந்தனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா், வருவாய்த் துறையினா் பொதுமக்களை எச்சரித்து அனுப்பினா். கல்லணைக்கு செல்லும் சாலையோரம் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தண்ணீா் வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் வயல்கள், வீடுகளில் வெள்ள நீா் புகும் நிலை உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உத்தமா்சீலி ஊராட்சியினரும், மாவட்ட நிா்வாகத்தினரும் இணைந்து 24 மணிநேரமும் இப் பகுதியில் ரோந்து சுற்றி கண்காணிக்கின்றனா்.

அமைச்சா் கே.என். நேரு, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மற்றும் அதிகாரிகளும் இப் பகுதியைப் பாா்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT