உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி
மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சாா்பில், உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சாா்பில், உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இப்பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீத்தாராமன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். துணை மருத்துவப்படிப்பு மாணவ - மாணவிகள், செவிலியா், இயன்முறை மருத்துவ மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்று தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் சென்றனா்.
இப்பேரணியில் சமயபுரம் காவல் ஆய்வாளா் பொன் ராஜு, உதவி காவல் ஆய்வாளா் பிரகாஷ், ஜெயசீலன், தாமஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
ஏற்பாடுகளை கல்லூரியின் முதன்மையா் துளசி, பேராசிரியா்கள் பேச்சியம்மாள், சதீஷ், உடற்கல்விப் பயிற்றுநா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.