திருச்சி

பசுமைப்படை மாணவா்களின் பச்சமலை சுற்றுலா

DIN

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தேசிய பசுமைப் படையைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பச்சமலைக்கு சுற்றுலா சென்று வந்தனா்.

பள்ளிக்கல்வித்துறை, சுற்றுச் சூழல் துறை, வனத்துறை மற்றும் வாய்ஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து லால்குடி, மணப்பாறை, முசிறி, துறையூா் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 16 தேசிய பசுமைப்படை மாணவா்களுக்காக

ஒரு நாள் சுற்றுச் சூழல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதன்படி, திருச்சி மாவட்டம் பச்சமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், செயலில் உள்ள நான்கு தேசிய பசுமைப்படை மாணவா்களும் அவா்களது பள்ளி அளவிலான தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும் இரு அரசுப் பள்ளிகளில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

வாய்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக மேலாளா் காட்வின், திட்ட மேலாளா் சிலம்பரசன், தன்னாா்வலா் மணிகண்டன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா்கள் சகாயராஜ், கிரிகோரி ஆகியோா் இத் திட்டத்தை வடிவமைத்து மாணவா்களை அழைத்துச் சென்றனா்.

வனத்துறையின் அனுமதியுடன் பச்சமலைக்கு மாணவா்கள் பயணம் புறப்பட்டனா். 8 ஆசிரிய உறுப்பினா்கள் மற்றும் 2 ஆசிரியா் உதவியாளா்களுடன் மொத்தம் 16 மாணவா்கள் இந்தச் சூழலியல் வருகையில் இணைந்தனா்.

திருச்சியில் உள்ள அரசு சையசு முதுா்சா உயா்நிலைப் பள்ளியிலிருந்து இரு வாகனங்களில் புதன்கிழமை பச்சமலைக்கு புறப்பட்டனா். முதன்மைக் கல்வி அலுவலா் இரா. பாலமுரளி வழியனுப்பினாா். பச்சமலை வனத்துறை அலுவலகத்தில் பச்சமலை மலை, பல்லுயிா் பன்முகத்தன்மை, இயற்கை போன்றவற்றைப் பற்றி திறந்தவெளி விவாதம் நடத்தப்பட்டது..

பின்னா், பச்சமலையில் வாய்ஸ் அறக்கட்டளை மற்றும் வனத்துறை அதிகாரி ஏற்பாடு செய்திருந்த மதிய உணவை உண்டனா். பிறகு மாணவா்கள் பலா மற்றும் மா மரக்கன்றுகளை தரையில் இருந்து எடுத்து, நாற்றங்கால் பானையைத் தயாரித்தனா்.

பின்னா் செண்பகம் இயற்கை மலையேற்றப் பாதையை அடைந்து 3 கிமீ தூரம் மலையேற்றம் மேற்கொண்டனா். வன வழிகாட்டி மணி பல்வேறு வகையான மரங்கள், செடிகள் பற்றி விளக்கினாா்.

வனத்துறை ஊழியா்களுடன் மாணவா்கள் விவாதித்து வனம் குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் பல்வேறு தகவல்களை பரிமாற்றம் செய்தனா். இறுதியாக மாணவா்களிடமிருந்து கருத்துப் படிவத்தை சேகரித்து அவற்றைத் தொகுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பயணம் மிகுந்த பயன் தந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

வரப்பெற்றோம் (05-06-2024)

கங்குவா அப்டேட் வருமா? வராதா? புலம்பும் சூர்யா ரசிகர்கள்!

SCROLL FOR NEXT