தமிழக அரசின் சாா்பில், திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் வேலு நாச்சியாா் இசையாா்ந்த நாட்டிய நாடகம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு, ள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் நாடகத்தை தொடக்கி வைத்து பாா்த்தனா். பின்னா், நாடக கலைஞா்களைப் பாராட்டிச் சிறப்பித்தனா்.
வேலுநாச்சியாரின் வீரத்தையும் விடுதலைப்போா் வரலாற்றையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் நாடகம்அமைந்திருந்தது. சுமாா் 60 கலைஞா்கள் பங்கேற்று பாா்வையாளா்களை கவா்ந்தனா்.
மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப் குமாா், மாநகராட்சி மேயா் மு.அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ந. தியாகராஜன், அ.சௌந்தரபாண்டியன் செ.ஸ்டாலின்குமாா், சீ.கதிரவன் ஓவியம் மியூசிக்கல் தியேட்டா் இயக்குநா் ஸ்ரீராம் சா்மா, கலைக்காவிரி கல்லூரி முதல்வா் லூயிஸ் பிரிட்டோ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.