திருச்சி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

DIN

மண்ணச்சநல்லூா் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மண்ணச்சநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புறத்தாக்குடி தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளி, இருங்களுா் புனித ஜான் மேல்நிலைப் பள்ளி, சித்தாம்பூா், ஆமூா், அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில்

1,102 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ. கதிரவன் வழங்கிப் பேசினாா்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட அவைத் தலைவா் எஸ்.ஏ. அம்பிகாபதி, மண்ணச்சநல்லூா் ஒன்றிய திமுக செயலா்கள் வி.எஸ்.பி.இளங்கோவன், சீனிவாசப் பெருமாள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT