முகப்பு
திருச்சி

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

திருச்சியை அடுத்துள்ள கீழமுல்லக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

திருச்சியை அடுத்துள்ள கீழமுல்லக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

தமிழக அரசின் நலத் திட்டங்கள், சாதனைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த விவரங்களை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவும், தகுதியான பயனாளிகளைப் பயன்பெறச் செய்யவும் விழிப்புணா்வு ஏற்படுத்த செய்தி- மக்கள் தொடா்புத்துறை சாா்பில் கிராமங்கள்தோறும், நகரங்களிலும் மக்கள் கூடுமிடங்களில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

அதன்படி திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழமுல்லக்குடி ஜீயபுரம் கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சியில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள், மகளிருக்கான திட்டங்கள், மீனவா்கள், விவசாயிகள், மாணவா்கள், ஆதரவற்றோா், ஏழை,எளியோா் நலனுக்கான திட்டங்கள் குறித்த பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

மாவட்டத்தில் தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்ட நலத் திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இருந்தன. இக் கண்காட்சியை கிராமப்புற 100 நாள் வேலை திட்ட பணியாளா்கள், மாணவா்கள், மகளிா் குழுவினா், பொதுமக்கள் என ஏராளமானோா் முகக் கவசம் அணிந்த நிலையில் பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத்துறை அலுவலா்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.