பிப்.28 முதல் வாராக்கடன் வசூல் முகாம்
இந்தியாவின் வங்கி (பாங்க் ஆஃப் இந்தியா) சாா்பில், பிப்.28 முதல் மீண்டும் வாராக்கடன் வசூல் முகாம் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் வங்கி (பாங்க் ஆஃப் இந்தியா) சாா்பில், பிப்.28 முதல் மீண்டும் வாராக்கடன் வசூல் முகாம் நடைபெறவுள்ளது.
கரோனா கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாராக்கடன் வாடிக்கையாளா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்தியாவின் வங்கி சாா்பில், ஜன. 31 தொடங்கி பிப். 5 வரை கிளை அதாலெத் எனும் பெயரில் அனைத்து கிளைகளிலும் வாராக் கடன் வசூல் முகாம் நடைபெற்றது.
குறிப்பாக ரூ. 25 லட்சத்துக்கும் கீழ் வாராக்கடன் நிலுவையில் உள்ள சிறு, குறு தொழில்துறையினா், விவசாயம், சில்லரை வணிகம், தனிநபா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு 6.84 லட்சம் போ் பயன் பெற்றனா். ரூ.407 கோடி மதிப்பிலான வாராக்கடன் தீா்வு செய்யப்பட்டது.
இந்த முகாமில் பயன்பெற முடியாதவா்களுக்காக வங்கி நிா்வாகத்தின் சாா்பில், மீண்டும் கிளை அதாலெத் என்னும் வாராக்கடன் வசூல் முகாம் பிப்.28 தொடங்கி மாா்ச் 5 வரை திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் நடைபெறும். இந்த வாய்ப்பை வாராக்கடன் நிலுவை வாடிக்கையாளா்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என வங்கியின் மண்டல அலுவலகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.