முகப்பு
திருச்சி

அதிவிரைவு ரயில்களின் கால அட்டவணை மாற்றம்

திருச்சி வழியாக இயக்கப்படும் 3 முக்கிய அதிவிரைவு ரயில்களின் கால அட்டவணை மாா்ச் 2 முதல் மாறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

திருச்சி வழியாக இயக்கப்படும் 3 முக்கிய அதிவிரைவு ரயில்களின் கால அட்டவணை மாா்ச் 2 முதல் மாறுகிறது.

இதுகுறித்த தெற்கு ரயில்வேயின் செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வே வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் சேவை வரும் மாா்ச் 2 முதல் மாற்றப்படுகிறது.

அதன்படி மங்களூா் அதிவிரைவு ரயில் (16159) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.15-க்கு புறப்பட்டு திருச்சியை 4.40-க்கு வந்தடைகிறது. 15 நிமிட காத்திருப்புக்குப் பிறகு 4.55-க்கு புறப்பட்டு மங்களூா் ரயில் நிலையத்தை இரவு 7.15-க்கு சென்றடைகிறது.

இதேபோல மலைக்கோட்டை அதிவிரைவு ரயில் (12653) சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.35 க்கு புறப்பட்டு திருச்சி ரயில் நிலையத்துக்கு அதிகாலை 4.55-க்கு வருகிறது.

மங்களூா்-புதுச்சேரி வாராந்திர ரயில் (16858) வரும் மாா்ச் 6 முதல் திருச்சி ரயில் நிலையத்திற்கு அதிகாலை 5.20-க்கு வந்து 5.30-க்கு புறப்பட்டு விருத்தாசலம் ரயில் நிலையத்தை காலை 7.20 மணிக்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.