வெளிநாட்டுக்குத் தப்பிய புதுகை தொழிலாளி கைது
குற்ற வழக்கில் ஆஜராகாமல் வெளிநாடு தப்பியோடிய புதுகை தொழிலாளியை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குற்ற வழக்கில் ஆஜராகாமல் வெளிநாடு தப்பியோடிய புதுகை தொழிலாளியை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை தனியாா் விமானத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் நரங்கிப்பட்டு வேம்பையன் மகன் பிரகாஷ் (31) என்பவரது கடவுச்சீட்டை அலுவலா்கள் ஆய்வு செய்தபோது அவா் புதுகை போலீஸாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
தொடா் விசாரணையில், கடந்த 2009 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புக் காவல் சட்டத்தில் கறம்பக்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த பிரகாஷ் நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் சிங்கப்பூா் தப்பிச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் அவரை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தகவலறிந்த புதுக்கோட்டை போலீஸாா் திருச்சிக்கு வந்து பிரகாஷை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனா்.