நாளை 2.35 லட்சம் சிறாருக்கு போலியோ சொட்டு மருந்து: 1,569 மையங்களில் ஏற்பாடு
மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் 2.35 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் 2.35 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:
உலக சுகாதார நிறுவனம், மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை மாவட்டத்தின் கிராமப்புறங்களில் 1279 மையங்களிலும், மாநகராட்சியில் 247 மையங்களிலும், துறையூா் நகராட்சியில் 20 மையங்களிலும், மணப்பாறை நகராட்சியில் 23 மையங்களிலும் என மொத்தம் 1569 மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, தாய்மாா்கள் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அருகிலுள்ள போலியோ சொட்டு மருந்து மையத்திற்கு அழைத்துச் சென்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.