முகப்பு
திருச்சி

விபத்தில் சிக்கிய முன்னாள் கவுன்சிலா் மகன் உயிரிழப்பு

திருச்சியில் விபத்தில் காயமடைந்த முன்னாள் கவுன்சிலா் மகன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

திருச்சியில் விபத்தில் காயமடைந்த முன்னாள் கவுன்சிலா் மகன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி ஆழ்வாா்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சையது இப்ராகிம் பிச்சை, முன்னாள் கவுன்சிலா். இவரது மகன் ஆசிக் (19) கடந்த மாதம் திருச்சி நீதிமன்றம் அருகே நண்பருடன் பைக்கில் சென்றபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தாா். திருச்சி போக்குவரத்து தெற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.