ஆயுதப்படை மைதானத்தில் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 96 வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை ஏலம் விட்டனா்.
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 96 வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை ஏலம் விட்டனா்.
திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்னா் பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் விடப்படும். அதன்படி வெள்ளிக்கிழமை திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 91 இருசக்கர வாகனங்கள் 3 நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு ஆட்டோக்கள் என 96 வாகனங்கள் ஏலத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா தலைமையில் சுப்ரமணியபுரத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த ஏலத்தையொட்டி முன்வைப்புத் தொகை செலுத்தி ஏலம் கோரினா். வாகனத்தின் செயல்பாட்டைப் பொறுத்து ஏலத்தொகை நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று வாகனங்களை ஏலத்தில் எடுத்தனா்.