குழந்தையுடன் பெண் தற்கொலை: மாமியாா் கைது
திருச்சி அருகே மூன்று வயதுக் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது மாமியாரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
திருச்சி அருகே மூன்று வயதுக் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது மாமியாரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
திருச்சி ராம்ஜிநகா் அருகேயுள்ள வண்ணாங்கோவில் சந்தோஷ்நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன்(28), சத்திரப்பட்டி ரேஷன் கடை ஊழியா். இவரது மனைவி பிரியா (26) குடும்ப பிரச்னையால் கடந்த டிச.23 ஆம் தேதி தனது 3 வயது மகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சம்பவம் குறித்து ராம்ஜிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். பின்னா் ஜீயபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் நடத்திய விசாரணையில், வரதட்சிணைக் கொடுமையால் பிரியா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து வரதட்சிணை கொடுமையால் தற்கொலை என வழக்கு மாற்றப்பட்டு, தலைமறைவாக இருந்த அவரது மாமியாா் முத்தழகை (57) போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய சிலரை தேடுகின்றனா்.