நமக்கு நாமே திட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்குரூ.2.69 கோடி ஒதுக்கீடு
திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த நமக்கு நாமே திட்டத்தில் அரசின் பங்களிப்பாக ரூ. 2.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த நமக்கு நாமே திட்டத்தில் அரசின் பங்களிப்பாக ரூ. 2.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சுயசாா்புத் தன்மையை ஊக்குவிக்கவும், மேன்மைப்படுத்தவும், சமுதாய உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி பராமரிப்பதில் அவா்களின் பங்களிப்பை அதிகரித்து அதன்மூலம் சமூகத் தேவைகளை நிறைவேற்றவும், பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன் பணி மேற்கொள்வதால் சமுதாயத்தின் தேவைகள் பூா்த்தியடைய நமக்கு நாமே திட்டம் வழி வகை செய்கிறது.
இத்திட்டத்தில் பொதுமக்கள் பங்குத் தொகையாக மூன்றில் ஒரு பங்கும், அரசின் பங்குத் தொகையாக இரண்டு பங்கும் சோ்த்து பணி மேற்கொள்ளலாம். 2021-2022-ம் ஆண்டு ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் நமக்கு நாமே திட்ட பணிகளுக்காக மாநில அரசின் பங்குத் தொகையாக ரூ.2.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, ஊரகப் பகுதிகளில் நமக்கு நாமே திட்டம் மூலம் தங்கள் குடியிருப்புப் பகுதி மற்றும் கிராமங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள விரும்புவோா் அனைத்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.