முகப்பு
திருச்சி

திருச்சி அருகே இலவச கால்நடை மருத்துவ முகாம்

திருச்சி அருகேயுள்ள ஒட்டக்குடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலவச கால்நடை மருத்துவ முகாமில் 1,253 கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

திருச்சி அருகேயுள்ள ஒட்டக்குடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலவச கால்நடை மருத்துவ முகாமில் 1,253 கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருச்சி கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் திருவெறும்பூா் ஒன்றியம், கீழமுல்லக்குடி கால்நடை மருந்தகத்துக்குள்பட்ட ஒட்டக்குடியில் நடைபெற்ற முகாமை, கீழமுல்லக்குடி ஊராட்சித் தலைவா் கோகிலா சண்முகம் தொடங்கி வைத்தாா்.

முகாமுக்கு தலைமை வகித்து கால்நடைப் பாரமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் எஸ். எஸ்தா் ஷீலா பேசுகையில், நோய்களில் இருந்து கால்நடைகளைக் காக்க, மழைக் காலங்களில் அவற்றுக்கு குடற்புழு நீக்கம் செய்தல் மற்றும் தடுப்பூசி செலுத்தல் அவசியம் என்றாா் அவா்.

முகாமில் திருநெடுங்குளம் ஊராட்சிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த 983 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினைப் பரிசோதனை, செயற்கை கருவூட்டல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. 250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், கால்நடை வளா்க்கும் 60 பேருக்கு தாது உப்புக் கலவை வழங்கப்பட்டது.

திருச்சி கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் அ. மருதைராஜு, கால்நடை உதவி மருத்துவா் திருமலைச்செல்வி ஆகியோா் ஆலோசனைகளை வழங்கினா். கால்நடை மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா். முகாமில் கன்று பேரணி நடத்தி சிறந்த கிடாரிக்கன்றுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், கால்நடை வளா்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதுகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.