முகப்பு
திருச்சி

துப்பாக்கி தொழிற்சாலையில் நவீன கட்டுப்பாட்டு அறை 40 இடங்களில் கூடுதல் சிசிடிவி கேமரா

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக படைக்கலன் தொழிற்சாலையான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் (ஓஎஃப்டி) நவீன கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சக படைக்கலன் தொழிற்சாலையான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் (ஓஎஃப்டி) நவீன கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

திருவெறும்பூா் அருகேயுள்ள இந்த தொழிற்சாலையின் பாதுகாப்பு அம்சங்களுக்காக இயங்கி வரும் பிரத்யேக அலுவலகத்தில் உயா் உணா் திறன் கொண்ட சிசிடிவி கட்டுப்பாட்டு அறையைத் திறந்துவைத்து துப்பாக்கி தொழிற்சாலையின் பொறுப்பு அதிகாரி ராஜீவ் செயின் பேசியது:

தொழிற்சாலையின் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டதன் தொடா்ச்சியாக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைத்து முதல்கட்டமாக 65 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.

தொழிற்சாலையின் அனைத்து நுழைவுப் பாதைகள், பிரதான சாலைகள், குடியிருப்புகள் என கடந்த ஓராண்டுக்குள் பெரும்பாலான பகுதிகளில் கேமரா பொருத்தப்பட்டு முழுவதும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த கேமராக்களின் செயல்பாடுகளை ஓரிடத்தில் இருந்தபடியே கண்காணித்து உத்தரவு பிறப்பிக்க ஏதுவாக நவீன கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையானது எந்த விடுமுறையும் இல்லாமல் 24 மணிநேரமும் இயங்கும். மேலும் 40 இடங்களில் கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் 2 வாரங்களுக்குள் முடியும் என்றாா் அவா்.

இத் திட்டமானது பாதுகாப்பு அதிகாரியான லெப்டினன்ட் கா்னல் காா்த்திகேஷ் மூலம் வடிவமைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறை தலைமை அதிகாரி விஜிகுமாா், மேற்பாா்வையாளா் செந்தில்குமாா் ஆகியோரால் செயல்படுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.