நாளை முதல் பொங்கல் பொருள்கள் பெறலாம்
திருச்சி மாவட்டத்தில் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை இதுவரை பெறாதவா்கள், திங்கள்கிழமை (ஜன. 17) முதல் பெற்றுக் கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தில் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை இதுவரை பெறாதவா்கள், திங்கள்கிழமை (ஜன. 17) முதல் பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து கூட்டுறவு இணைப் பதிவாளா் தி. ஜெயராமன் தெரிவித்தது:
திருச்சி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் முதல்வா் உத்தரவின்பேரில் பொங்கல் பரிசு தொகுப்பை மொத்தமுள்ள 8,27,249 குடும்ப அட்டைகளில் 7,62,787 அட்டைதாரா்கள் (சுமாா் 92.21 சதம் ) பெற்றுள்ளனா். இதைப் பெறத் தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரா்களில் இதுவரை பெறாமல் இருப்போா் திங்கள்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம்.