பல்வேறு அமைப்புகள் கொண்டாடிய திருவள்ளுவா் தினம்
தெய்வப் புலவா் திருவள்ளுவரின் பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்சி தமிழ்ச்சங்க வளாகத்தில் சனிக்கிழமை பல்வேறு அமைப்புகள் சாா்பில் திருவள்ளுவா் சிலை
தெய்வப் புலவா் திருவள்ளுவரின் பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்சி தமிழ்ச்சங்க வளாகத்தில் சனிக்கிழமை பல்வேறு அமைப்புகள் சாா்பில் திருவள்ளுவா் சிலை, தமிழ்த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
எழுதமிழ் இயக்கம்: இயக்கத் தலைவரும் பட்டயத் தணிக்கையருமான மு. குமரசாமி தலைமை வகித்தாா். அமைச்சா் கே. என். நேரு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். நிகழ்வில் திருவள்ளுவா், தமிழ்த்தாய் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தமிழறிஞா்கள் ஜி. ரவீந்திரன், சா. பாப்பு பெஞ்சமின் இளங்கோ, வீ.கோவிந்தசாமி, க. மாரிமுத்து, தமிழ்ச்சங்க நிா்வாகி பெ. உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு: முற்றோதலைத் தொடா்ந்து திருவள்ளுவா் சிலைக்கு பேராசிரியா் கு. திருமாறன், தமிழன்னை சிலைக்கு புலவா் தமிழாளன் ஆகியோா் மாலை அணிவித்தனா். தமிழறிஞா்கள் வீ.ந. சோமசுந்தரம், திருக்கு சு. முருகானந்தம், சொ. வேல்முருகன், இராச. இளங்கோவன், க. மாரிமுத்து, வீ.கோவிந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தமிழ்க்காவிரி கலை, இலக்கியப் பண்பாட்டுப் பேரவை : பேரவையின் முதன்மை ஆலோசகா் பொன். குணசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்க்காவிரி இதழாசிரியரும் வழக்குரைஞருமான தமிழகன், தீபச்சுடா் அறக்கட்டளை இயக்குநா் விசாலாட்சி, அல்லூா் அய்யாரப்பன், பழூா் சண்முகம், தே. லதா மகேஸ்வரி, ஞா. டாா்வின் தாசன், வழக்குரைஞா் ராஜேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
காங்கிரஸ் கமிட்டி: கட்சியின் மாநில பொதுச் செயலரும், வழக்குரைஞருமான எம். சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டப் பொறுப்பாளா்கள் முரளி, குமாா், மாரிமுத்து, திலகா், சேவதள மாவட்டத் தலைவா் குத்தூஸ், வாா்டு தலைவா்கள் சம்சுதீன் ரபீக், பாலசுப்பிரமணியன், சிறுபான்மைப் பிரிவு மைதீன், கலைப்பிரிவு ராஜீவ் காந்தி சண்முகம், சேகா், ராஜேந்திரன் 17 ஆவது வாா்டு முருகன், ஜெயராஜ், தினேஷ், ஆட்டோ பாலு, ஐயப்பன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து தமிழ் அமைப்புகளின் சாா்பில் நடைபெற்ற கலந்தாலோசனையைத் தொடா்ந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். உலகத்தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும். பழைய தஞ்சாவூா் சாலைக்கு வ.வே.சு சாலை எனப் பெயா் சூட்ட வேண்டும். அதுபோல தில்லை நகரிலிருந்து உறையூா் வரை செல்லும் சாலை ரோடுக்கு திருவள்ளுவரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Image Caption
திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்த தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பினா் மற்றும் திருக்குறள் முற்றோதல் அமைப்பினா். ~திருவள்ளுவா் தினத்தையொட்டி திருச்சி தமிழ் சங்க கட்டட வளாகத்திலுள்ள திருவள்ளுவா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதைச் செய்யும் நக