முகப்பு
திருச்சி

கரோனா விழிப்புணா்வு முகாம்

திருச்சி பாலக்கரை பகுதியில் ஜமாத் இஸ்லாமி ஹிந்த் சமூக சேவை அமைப்பு சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

திருச்சி பாலக்கரை பகுதியில் ஜமாத் இஸ்லாமி ஹிந்த் சமூக சேவை அமைப்பு சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் நடைபெற்ற நிகழ்வை பாலக்கரை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் இருதயராஜ் தொடங்கி வைத்தாா். பொதுமக்கள், களப்பணியாளா்களுக்கு முகக் கவசம், கிருமிநாசினியோடு கரோனா விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஜமாத் இஸ்லாமி ஹிந்த் சேவை அமைப்பின் திருச்சி மாநகர தலைவா் ஹஜ் மொய்தீன், முனைவா் அப்துல் ரஜாக், சுல்தான், முஹம்மத் யாஸீன், மீரான், அப்துல்லா கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.