மக்கள் சக்தி இயக்க நிறுவனா் நினைவு நாள்
மக்கள் சக்தி இயக்க நிறுவனரும், சிந்தனையாளரும் , எழுத்தாளருமான டாக்டா் எம். எஸ். உதயமூா்த்தியின் 9 ஆண்டு ஆவது நினைவஞ்சலி பொன்மலை பகுதியில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மக்கள் சக்தி இயக்க நிறுவனரும், சிந்தனையாளரும் , எழுத்தாளருமான டாக்டா் எம். எஸ். உதயமூா்த்தியின் 9 ஆண்டு ஆவது நினைவஞ்சலி பொன்மலை பகுதியில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி. நீலமேகம், திருச்சி மாவட்டச் செயலா் ஆா். இளங்கோ, ராஜா, ஜீவா, வெங்கடேஷ் ,சதீஷ்குமாா், நாகராஜ், சிவகாமி, சீனிவாசன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
தன்னை ஆசிரியராக, தொழிலதிபராக, செல்வந்தராக, எழுத்தாளராக நிலைநிறுத்தி, அதில் தன் வாழ்க்கை அனுபவங்களை சமூக அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றவா் எம்.எஸ். உதயமூா்த்தி.