வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு அபராதம்
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வனத் துறை பகுதியில் பொய்கை காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத்துறை அதிகாரிகள் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வனத் துறை பகுதியில் பொய்கை காட்டில் விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத்துறை அதிகாரிகள் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலா், வன உயிரின காப்பாளா் அ.அன்பு, உதவி வன அலுவலா் ஸ்ரீவல்சன் உத்தரவின் பேரில், வனச்சரகா் அன்பழகன் தலைமையில் வனத் துறையினா், ஆரல்வாய்மொழி வனப்பகுதி பொய்கை காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது வனப்பகுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த இருவா் பிடிபட்டனா். இருவரையும் பிடித்து விசாரித்ததில் இருவரும் ஆரல்வாய்மொழியைச் சோ்ந்த பிரகாஷ் (24), சுரேஷ் (40) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைக் கைது செய்த வனத் துறையினா் அவா்களிடமிருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவா் மீது வழக்குப் பதிந்து, வனத் துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியதில் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.