முகப்பு
திருச்சி

கைவிட்டுச் சென்ற குழந்தையை பெற வந்த தாய்

மணப்பாறையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் தான் விட்டுச் சென்ற குழந்தையை வியாழக்கிழமை பெற வந்த தாய் மணப்பாறை காவல் நிலையத்தில் ஆஜரானாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

மணப்பாறையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் தான் விட்டுச் சென்ற குழந்தையை வியாழக்கிழமை பெற வந்த தாய் மணப்பாறை காவல் நிலையத்தில் ஆஜரானாா்.

மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை கைவிடப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து மணப்பாறை போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், மருங்காபுரி வட்டம் அம்மாசத்திரம்புதூரை சோ்ந்த தனலெட்சுமி என்பவா் மணப்பாறை காவல் நிலையத்தில் ஆஜராகி, மருத்துவமனையில் குழந்தையை விட்டுச் சென்றது தான்தான் எனத் தெரிவித்தாா்.

மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் சென்னை தனியாா் நிறுவன ஊழியரான தனது கணவா் தமிழரசன் திட்டிய வேதனையில் மருத்துவமனையில் குழந்தையை விட்டு சென்ாகவும், சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் வந்து பாா்த்தபோது குழந்தை அங்கு இல்லை என்றும் தெரிவித்த அவா், குழந்தையைப் பெற திருச்சிக்குச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.