திருச்சி

புத்தனாம்பட்டி கல்லூரியில் தேசிய தர மதிப்பீடு குழு ஆய்வு

DIN

துறையூா் அருகேயுள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரியில் தேசிய தர மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

புன்யஸ்லோக் அகில்யாதேவி ஹோல்கா் சோலாப்பூா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மிருணாளினி பட்நவீஷ், கா்நாடக மாநிலம் பெலகவி ராணி சென்னம்மா பல்கலைக்கழக கணிணித் துறை பேராசிரியா் சிவானந்த கோா்னாலே, கேரள மாநிலம் கோழிக்கோடு எஸ்ஏஎப்ஐ இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ் ஸ்டடி முதல்வா் இ.பி. இம்பிச்சிகோயா உள்ளிட்ட குழுவினா் ஜன. 27, 28-களில் இங்கு ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், தன்னாட்சிக் கல்லூரிப் பாடத்திட்டம், கல்வி போதிக்கும் முறை, ஆராய்ச்சி மற்றும் மாணவா்களின் முன்னேற்றம் உள்ளிட்ட காரணிகளை மதிப்பீடு செய்தனா். பின்னா் கல்லூரியின் தரம் குறித்த அறிக்கையை கல்லூரி முதல்வா் ஏ.ஆா். பொன்பெரியசாமியிடம் வழங்கினா்.

ஆய்வுக் குழுவுக்கு கல்லூரி ஒருங்கிணைப்பாளா் ஏ. வெங்கடேசன், மாணவா்கள், ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லா பணியாளா்கள் ஒத்துழைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT