முகப்பு
திருச்சி

திருச்சி: திமுக உள்கட்சித் தேர்தல்; விருப்பமனு படிவம் வழங்கல்

திமுக உள்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு விருப்ப மனு படிவம் திருச்சியில் இன்று வழங்கப்பட்டது.

திருச்சி

திருச்சி: திமுக உள்கட்சித் தேர்தல்; விருப்பமனு படிவம் வழங்கல்

திமுக உள்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு விருப்ப மனு படிவம் திருச்சியில் இன்று வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

திருச்சி: திமுக உள்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு விருப்ப மனு படிவம் திருச்சியில் இன்று வழங்கப்பட்டது.

திமுகவின் 15-வது உள்கட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவரங்கம், திருவானைக்கா, உறையூர், தில்லை நகர், பொன் நகர், காஜாமலை ஆகிய பகுதிகளில் கழக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்பமனு விண்ணப்ப படிவம் இன்று வழங்கப்பட்டது. 

இது தொடர்பாக திருச்சி தில்லை நகரில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி தலைமை வகிக்க, மாநகர செயலாளர் மு.அன்பழகன் முன்னிலையில் தேர்தல் ஆணையர் செல்வராஜ், பகுதி கழக நிர்வாகிகளுக்கு விருப்ப மனு மற்றும் விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.  இதில்  ஏராளமானவர்கள் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை பெற்று சென்றனர். 

விருப்பமனு படிவத்தை பூர்த்தி செய்த பின்னர், அத்துடன் வேட்பு மனுவையும் இணைத்து தாக்கல் செய்து, கட்சி நிர்வாகிகள் தேர்வில் பங்கேற்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →