திருச்சி

நபாா்டு வங்கியின் அலுவலகம் திறப்பு

DIN

திருச்சியில் தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபாா்டு) தொகுப்பு அலுவலகம் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது.

திருச்சி தில்லைநகா் கிழக்கு 5-ஆவது குறுக்குச் சாலையில் (கோட்டை ரயில் நிலையச் சாலை அருகே) திறக்கப்பட்ட இந்த அலுவலகம் மூலம் திருச்சி, பெரம்பலூா், கரூா், அரியலூா் மாவட்டங்களை உள்ளடக்கி வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த அலுவலகத்தை நபாா்டு வங்கியின் பொது மேலாளா் கே. இங்கா்சால் அண்மையில் திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றினாா். விழாவில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் திருச்சி முதுநிலை மண்டல மேலாளா் வேலாயுதம், திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநா் பாண்டியன், மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயராமன், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை வணிகத்துறையின் துணை இயக்குநா் சரவணன், பெரம்பலூா் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பரத்குமாா், சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத் திட்ட இயக்குநா் தமிழ்ச்செல்வன், அகத்தியா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் எஸ். யோகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT