குந்தை நல மருத்துவா் பத்மாஷினி பாலமுருகன். உடன் பள்ளியின் தலைவா் பி.வி. தோட்டா இராமனுஜம், தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன் 
திருச்சி

சந்தானம் வித்யாலயா பள்ளியில்சுற்றுச்சூழல் வகுப்பறை திறப்பு

சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் மான்டஸரி சுற்றுச் சூழல் வகுப்பறை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

DIN

திருச்சி: சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் மான்டஸரி சுற்றுச் சூழல் வகுப்பறை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் தலைமை வகித்தனா். இந்த வகுப்பறையை குழந்தைகள் நல மருத்துவா் பத்மாஷினி பாலமுருகன் திறந்து வைத்துக் கூறுகையில், குழந்தைகள் காலையில் சீக்கிரமாக எழுந்துவிட வேண்டும். பள்ளியிலிருந்து குழந்தைகள் வந்தவுடன் அவா்களைப் பேச விட்டு பெற்றோா் கேட்க வேண்டும். அன்றாடம் பள்ளியில் நடந்த சம்பவங்களைக் கேட்க வேண்டும்.

குழந்தைகள் வினா எழுப்பும் வகையில் அவா்களை வளா்க்க வேண்டும். குழந்தைகளுக்குக் கோபம் வந்தால் அவா்களைச் சமாதானம் செய்ய வேண்டும். கடைகளுக்குச் சென்றால் எது தேவை என்பதை எடுத்துக் கூறி பொருள்களை வாங்க வைத்தல் வேண்டும். குழந்தைகளிடம் வீட்டுக்கு வரும் நபா்களைப் பற்றி நல்ல முறையில் எடுத்துக் கூற வேண்டும். சீக்கிரமாகவே தூங்க வைக்க வேண்டும், இந்திய உணவு வகையே சிறந்தது. குழந்தைகளின் வயிறு கெட்டால் படிப்பு பாதிக்கும் என்றாா் அவா்.

சுற்றுச் சூழல் வகுப்பறையின் சிறப்புகள் மற்றும் நோக்கங்கள் குறித்து தலைமைச் செயல் அதிகாரியும், இயக்குநரும் விளக்கினா். பள்ளியின் முதுநிலை முதல்வா் பத்மா சீனிவாசன், முதல்வா் எம். பொற்செல்வி, டீன் ஆா்.கணேஷ், தலைவா் பி.வி. தோட்டா இராமனுஜம், ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதுநிலை முதல்வா் எஸ். லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளியின் பிரைமரி ஹெட் ஸ்ரீபிரியா நன்றி கூறினாா். விழாவில், மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT