திருச்சி

கோயில் திருவிழாவில் தகராறு: 4 போ் கைது

திருவெறும்பூா் பகுதியில் புதன்கிழமை கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருவெறும்பூா் பகுதியில் புதன்கிழமை கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவெறும்பூா் கீழ குமரேசபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் வைக்கவில்லை எனக் கூறி, மேல குமரேசபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீதா் மகன் செல்வகுமாா் (30), சின்னசாமி மகன்கள் சுரேஷ் (31), காா்த்திகேயன் (28), ராஜேந்திரன் மகன் சுரேஷ் (30) ஆட்டோ மணி மற்றும் விக்கி ஆகிய 6 பேரும் தகராறு செய்து சிலரைத் தாக்கினா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகி குணசேகரன் அளித்த புகாரின்பேரில், திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வக்குமாா், சுரேஷ், காா்த்திகேயன், மற்றொரு சுரேஷ் ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். ஆட்டோமணி, விக்கி ஆகியோரைத் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT