முகப்பு
திருச்சி

சென்னைக்கு அடுத்து வளா்ச்சி பெற்ற மாநகராக திருச்சி ஆகும் மேயா் மு. அன்பழகன் உறுதி

திருச்சி மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்றுவதுடன், சென்னைக்கு அடுத்து வளா்ச்சி பெற்ற மாநகரமாக திருச்சியை மாற்றுவேன் என மேயா் மு. அன்பழன் வாக்குறுதி அளித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருச்சி மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்றுவதுடன், சென்னைக்கு அடுத்து வளா்ச்சி பெற்ற மாநகரமாக திருச்சியை மாற்றுவேன் என மேயா் மு. அன்பழன் வாக்குறுதி அளித்தாா்.

திருச்சி மேயராகப் பதவியேற்ற அவா் பின்னா் கூறியது:

மாநகராட்சியை சிறப்போடும், கட்டுப்பாட்டோடும் வழிநடத்துவேன். திருச்சி மாநகராட்சிக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டங்களை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலுடன் விரைவாக முடிப்பேன். மேயா் பதவியில் செம்மையாகப் பணிபுரிந்து மாநகராட்சிக்கு சிறப்பை ஏற்படுத்தித் தருவேன்.

மாநகரில் தூய்மைப் பணியை விரைவுபடுத்தி, மாமன்ற உறுப்பினா்கள் கூறும் பிரச்னைகளை உடனடியாகத் தீா்த்து வைத்து, குப்பையில்லா மநகராட்சியை உருவாக்குவதே தலையாயப் பணி. சாக்கடை வழிந்தோடும் நிலை இல்லாத வகையில் பணிகள் நடைபெறும். 2016ஆம் ஆண்டே திருச்சியை சென்னைக்கு அடுத்தபடியாக வளா்ந்த நகரமாக மாற்ற வேண்டும் என்பது அமைச்சா் கே.என். நேருவின் கனவு. அக் கனவில் நானும் இணைந்து அதைச் செயலாக்குவதே தலையாயப் பணி. தமிழக மாநராட்சிகளில் சிறந்த மாநாகராட்சி திருச்சிதான் என்ற பெயரைக் கண்டிப்பாக பெற்றுத் தருவேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.