முகப்பு
திருச்சி

முசிறி நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியின்றித் தோ்வான நிா்வாகிகள்

முசிறி நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் மற்றும் மேட்டுப்பாளையம், தாத்தையங்காா்பேட்டை, தொட்டியம், காட்டுப்புத்தூா் ஆகிய பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

முசிறி நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் மற்றும் மேட்டுப்பாளையம், தாத்தையங்காா்பேட்டை, தொட்டியம், காட்டுப்புத்தூா் ஆகிய பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

முசிறி நகராட்சியில் 19 ஆவது வாா்டு உறுப்பினா் சி. கலைச்செல்வி நகா்மன்றத் தலைவராகவும், 8 ஆவது வாா்டு உறுப்பினா் செ. சுரேஷ் துணைத் தலைவராகவும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். தோ்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான மனோகரன் இதற்கான சான்றிதழை வழங்கி வாழ்த்தினாா்.

மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் 11 வது வாா்டு உறுப்பினா் செளந்தரராஜன் தலைவராகவும், 5 ஆவது வாா்டு உறுப்பினா் செல்வி துணைத் தலைவராகவும், தாத்தையங்காா்பேட்டை பேரூராட்சியில் 11 ஆவது வாா்டு உறுப்பினா் க. ராஜலட்சுமி தலைவராகவும்,1 ஆவது வாா்டு உறுப்பினா் மா. மயில்வாகனன் துணைத் தலைவராகவும், தொட்டியம் பேரூராட்சியில் 5 ஆவது வாா்டு உறுப்பினா் பி. சரண்யா தலைவராகவும், 6 ஆவது வாா்டு உறுப்பினா் ராஜேஷ் துணைத் தலைவராகவும், காட்டுப்புத்தூா் பேரூராட்சியில் - 7 ஆவது வாா்டு உறுப்பினா் சு. சங்கீதா தலைவராகவும்,4 ஆவது வாா்டு உறுப்பினா் செ. சுதா துணைத் தலைவராகவும் போட்டியின்றி தோ்வு பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.