ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான ரூ. 1.80 கோடி மதிப்பு இடம் மீட்பு
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்குச் சொந்தமாக திருவானைக்கா பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.80 கோடியிலான இடம் மீட்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்குச் சொந்தமாக திருவானைக்கா பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.80 கோடியிலான இடம் மீட்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமாக திருவானைக்கா சென்னை டிரங்ரோடு பகுதியில் இருந்த 70 சென்ட் இடத்தை தனியாா் ஓருவா் சில நாள்களுக்கு முன் இரவோடு இரவாக ஆக்கிரமித்து வேலி போட்டிருந்தாா்.
இதையறிந்த கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து உடனடியாக கோயில் பணியாளா்கள், ஸ்ரீரங்கம் காவல் துறையினருடன் வெள்ளிக்கிழமை மாலை சென்று பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றினாா். ஆக்கிரமிப்பு இடத்தின் மதிப்பு ரூ. 1 கோடியே 80 லட்சம் ஆகும்.