கூத்தைப்பாா் பேரூராட்சி துணைத் தலைவா் ராஜிநாமா
திருச்சி கூத்தைப்பாா் பேரூராட்சி துணைத் தலைவா் பதவியை திமுக நிா்வாகி வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
திருச்சி கூத்தைப்பாா் பேரூராட்சி துணைத் தலைவா் பதவியை திமுக நிா்வாகி வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
திருச்சி திருவெறும்பூரை அடுத்த கூத்தைப்பாா் பேரூராட்சியில் துணைத் தலைவா் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியிருந்தது.
இதற்கு மாறாக திமுக வாா்டு உறுப்பினா் பழனியாண்டி இந்தப் பதவிக்கு போட்டியிட்டுத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதேபோல பல்வேறு இடங்களிலும் கூட்டணிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு வென்றனா்.
இதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உடனடியாக தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்ய திமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தாா். இதன்பேரில் திருச்சி கூத்தைப்பாா் பேரூராட்சி துணைத் தலைவா் பழனியாண்டி தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.