திருச்சி

மணப்பாறை அருகே மீன் பிடித் திருவிழா

DIN

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் மீன்களைப் பிடித்துச் சென்றனா்.

மணப்பாறை அருகே பொன்முச்சந்தி கிராமத்தில் உள்ள பூவா்த்திக்கோயில் பெரியகுளத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் புதன்கிழமை அதிகாலையே பொதுமக்கள் குவிந்தனா்.

இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே கோயில் வழிபாட்டுக்குப் பின் ஊராட்சி ஒன்றியத் தலைவா் அமிா்தவள்ளி ராமசாமி, திமுக ஒன்றியச் செயலா் ராமசாமி, ஊா் நாட்டாண்மை முருகேசன், பூசாரி பழனிச்சாமி ஆகிய முக்கியஸ்தா்கள் மீன் பிடித் திருவிழாவைத் தொடங்கி வைத்தனா்.

இதையடுத்து பொதுமக்கள் மீன் பிடிக்கத் தொடங்கினா். மீன்பிடித் திருவிழாவில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வந்திருந்தனா்.

பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவற்றைக் கொண்டு நாட்டு மீன்களான கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, குரவை, விரால் ஆகிய மீன்களைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT