கண்மாயில் மீன் பிடிக்கும் பொதுமக்கள். 
திருச்சி

மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் மீன்பிடித் திருவிழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மொண்டிப்பட்டி கொண்டைமாலையம்மன் கோயில் பெரிய குளத்தில் இன்று நடைபெற்ற 

DIN

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மொண்டிப்பட்டி கொண்டைமாலையம்மன் கோயில் பெரிய குளத்தில் இன்று நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு விரால், கெண்டை, கெளுத்தி மீன்களை பிடித்து சென்றனர். 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மணப்பாறை அருகே மொண்டிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கொண்டைமாலையம்ம்மன் கோயில் பெரிய குளத்தில் இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சியால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னதாகவே குளக்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மக்கள் அதிகம் குவிந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஆலய வழிபாட்டிற்கு பின் ஊர் நாட்டாண்மையும், முன்னாள் திமுக ஒன்றிய செயலாளருமான எம்.பி.எஸ்.நாகராஜன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி நாகராஜன் ஆகியோர் மீன் பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். 

கண்மாயில் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன் பிடிக்க தொடங்கினர். ஜாதி, மதம் பாராமல் அனைவரும்  ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெறும் இந்த மீன்படி திருவிழாவில், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து  ஏராளமான கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்திருந்தனர். 

பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள்  ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினர். அதில் மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, கொரவை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. 

கண்மாயில் தண்ணீர் அதிகமாக இருந்ததாலும், குவிந்த மக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும் போதிய அளவில் மீன் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. கண்மாயில் மீன்கள் பிடித்த மகிழ்ச்சியில் வீட்டிற்க்கு கொண்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT