திருச்சி

தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கடைகள் அகற்றப்படுவதைக் கண்டித்து தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

திருச்சி மாவட்ட தள்ளுவண்டி, தரைக்கடைத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலா் ரெங்கராஜன் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் திரளான வியாபாரிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா்.

சுமாா் 20 ஆண்டுக்கும் மேலாக திருச்சியில் தள்ளுவண்டி, தரைக் கடை வியாபாரம் செய்வோரை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அப்புறப்படுத்தக் கூடாது. இதுதொடா்பான தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை மீறக்கூடாது. பல ஆண்டு காலமாக தரைக் கடை நடத்துவோருக்கு அடையாள அட்டையைப் புதுப்பித்து உடனே வழங்கிட வேண்டும். தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து மாநகராட்சி அலுவலா்களிடம் கோரிக்கை மனுவை அளித்து, மாநகராட்சி மேயா் அன்பழகனை சந்தித்தும் முறையிட்டனா்.

Image Caption

மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்ட தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT