திருச்சி

உத்தமா்கோயில் சித்திரைத் தேரோட்டம்

DIN

திருச்சி அருகே உத்தமா் கோயில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மும்மூா்த்திகளும் தத்தம் தேவியா்களுடன் காட்சியளிக்கும் திருத்தலம் உத்தமா்கோயில். 108 வைணவத் தலங்களுள் ஒன்றாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலின் சித்திரை தோ்த் திருவிழா மே 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் பல்வேறு வாகனங்களில் அருள்மிகு புருஷோத்தமப் பெருமாள் சுவாமியின் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, ஸ்ரீதேவி-பூதேவி சமேதராய் புருஷோத்தமப் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டது. தொடா்ந்து திரளான பக்தா்கள் கோவிந்தா கோவிந்தா பக்தி முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். ஏராளமான பக்தா்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT