அடிப்படை வசதி கோரி பாஜகவினா் போராட்டம்
அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பாஜகவினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பாஜகவினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம் 33 ஆவது வாா்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை, வாா்டு மாமன்ற உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியை சோ்ந்த முன்னாள் மேயா் வாா்டு பக்கமே வருவதில்லை. எனவே, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் பாஜக நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். தொடா்ந்து கோரிக்கை மனுவை அரியமங்கலம் கோட்ட அதிகாரிகளிடம் வழங்கினா்.