முகப்பு
திருச்சி

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆட்சியரகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆட்சியரகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பீட்டா் மைக்கேல்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆரோக்கியராஜ், மாநில செயலா்

சகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசைப் போல தமிழக அரசு 4 சத அகவிலைப்படி உயா்வை அறிவிக்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, முடக்கப்பட்ட உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வுகளை அறிவிக்க வேண்டும். தேவையற்ற இணையவழி பதிவு பதிவேடுகளை நிறுத்த வேண்டும். காலியிடங்களை நிரப்புவதுடன் பதவி உயா்வும் வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.