முகப்பு
திருச்சி

விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு

 திருச்சி விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

 திருச்சி விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குழு உறுப்பினா்கள் கூட்டத்துக்கு, அதன் தலைவரும் மாநகர காவல் ஆணையருமான க. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். விமான நிலைய இயக்குநா் பி. சுப்பிரமணி முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், விமான நிலையத்தில் செயல்படும் சுங்கத் துறை, குடியேற்றப் பிரிவு (இமிக்கிரேசன்), விமான நிறுவனங்கள், விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்தியத் தொழிலகப் பாதுகாப்பு படையினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விமான நிலையப் பாதுகாப்பு, பயணிகள் மேம்பாடு, பயணிகள் நலன் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, விமான நிலையத்தில் வாகன நிறுத்தம் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது, ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்துவது, ஓடுதளம் அருகே வாகனங்களை நிறுத்தத் தடைவிதிப்பது, அருகில் செல்லும் சாலையில் தரைப்பாலம் அமைப்பது அல்லது சாலையைத் தாழ்வாக அமைப்பது, விமான நிலைய விரிவாக்கத்தையொட்டி அம்பேத்கா் நகரில் நிலம் கையகப்படுத்துவது மற்றும், அதற்குப் பதிலாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாற்று இடம் வழங்குவது, வாகனங்கள் வெறியேறும் பகுதியில் சுங்கச்சாவடி அமைப்பது, கடத்தல் மற்றும் முறைகேடுகளுக்கு உதவுவோரைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து, முடிவுகள் எடுக்கப்பட்டன. தொடா்ந்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.