முகப்பு
திருச்சி

டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் சாவு

திருச்சியில் வியாழக்கிழமை டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.அவரது சகோதரி பலத்த காயமடைந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

திருச்சியில் வியாழக்கிழமை டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.அவரது சகோதரி பலத்த காயமடைந்தாா்.

திருச்சி அருகேயுள்ள திருவாசி, மான்பிடிமங்கலத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் பிரசன்னா (27). இவரது தங்கை மோனிகா (25). இவா்கள் இருவரும் திருச்சி கோட்டை பகுதியில் பொருள்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில், வியாழக்கிழமை காலை திருச்சி புறப்பட்டனா்.

ஓயாமரி மயானம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவா்களுக்கு பின்னால் வந்த டிப்பா் லாரி இருசக்கரவாகனத்தில மோதியது. இதில் பிரசன்னா, மோனிகா இருவரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து வந்த போலீஸாா் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே பிரசன்னா உயிரிழந்தாா். திருச்சி போக்குவரத்துப் புலனாய்வு வடக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.