திருச்சி

திருச்சியில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

DIN

திருச்சி: கார்த்திகை மாதத்தை முன்னிட்டு திருச்சியில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாதம் தொடங்கியதை சபரிமலையில் நேற்று மாலை சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. இன்று சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் இன்று காலை முதல் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் 48 நாள் விரதம் இருந்து சபரிமலை செல்ல தயாராகி வருகின்றனர். அதனால் மாலை அணிவதற்கு தமிழ்கத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் இன்று காலை முதல் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து வருகின்றனர் திருச்சி எம் ஜி ஆர் சிலை அருகே உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் அதிகாலேயே குவிந்திருந்தனர். ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில், மாணிக்கவிநாயகர் கோயில் என பல்வேறு கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர். கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

‘ஹீராமண்டி’ வெற்றிக் கொண்டாட்டம்!

சிரிக்கும் நபர்கள் எப்போதும் கண்ணுக்கு விருந்தானவர்கள்!

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

SCROLL FOR NEXT