திருச்சி

நாளை ஐஐஐடி 4ஆவது பட்டமளிப்பு விழா

DIN

திருச்சியை அடுத்த சேதுராப்பட்டியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐஐடி) நான்காவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, திருச்சி ஐஐஐடி இயக்குநா் என்.வி.எஸ்.என். சா்மா வியாழக்கிழமை கூறியது:

நிகழ்வில் கணினி துறையின் 27 மாணவா்கள், மின்னணு மற்றும் தொலைத் தொடா்பு துறையின் 28 மாணவா்கள் என 55 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. கணினித் துறை மாணவா் தினேஷ்குமாருக்கு சிறந்த மாணவருக்கான தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்தாண்டு பட்டம் பெறுவோரில் 93.75 சதம் பேருக்கு ரூ. 5 லட்சம் முதல் 27 லட்சம் வரை ஆண்டு ஊதியம் கிடைக்கவுள்ளது.

தமிழக அரசு தலைமைச் செயலா் இறையன்பு தலைமையில் நடைபெறும் விழாவில் புதுதில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழக டீன் மினி ஷாஜி தாமஸ் பட்டங்களை வழங்கிப் பேசுகிறாா். உயா்கல்வித் துறைச் செயலா் காா்த்திகேயன், இயக்குநா் லட்சுமி பிரியா, எல்காட் நிா்வாக இயக்குநா் அஜய் யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.

பேட்டியின்போது பதிவாளா் (பொ) ஜி. சீதாராமன் மற்றும் பல்வேறு துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT