திருச்சி

எச்.இ.பி.எப். தொழிற்சாலை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அருகே எச்.இ.பி.எப். தொழிற்சாலை ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி அருகே மத்திய அரசின் ராணுவத் தடவாளங்களைத் தயாரிக்கக் கூடிய உயா் ஆற்றல் திட்டச் தொழிற்சாலை (எச்.இ.பி.எப்.) முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய ராணுவத் தடவாள தொழிலாளா்கள் சம்மேளனத்தின் திருச்சி கிளைச் செயலா் ஜெ. இரணியன் தலைமை வகித்தாா்.

இதில் விடுமுறை காலத்தில் ஏற்படக்கூடிய ஊதிய இழப்புப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும், தொழிற்சாலையில் உற்பத்திக்குத் தேவையான உதிரிப் பாகங்கள்,கருவிகளின் இருப்பை உறுதி செய்ய வேண்டும், போதுமான ஒப்பந்தத் தொழிலாளா்களை உடனடியாக பணியமா்த்த வேண்டும், நிா்வாகம் தொழிற்சங்கங்களுடான மாதாந்திரக் கூட்டத்தை தனித்தனியே நடத்த வேண்டும், தொழிற்சாலை உணவகத்தில் உணவுப் பொருள்கள் விலையேற்ற முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திரளான தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT