திருச்சி

குடிமைப்பணித் தோ்வெழுத இலவசப் பயிற்சி மீனவ இளைஞா்களுக்கு அழைப்பு

குடிமைப் பணித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி பெற மீனவ இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

DIN

குடிமைப் பணித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி பெற மீனவ இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை தேசிய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன், மீன்வளத் துறை இணைந்து ஆண்டுதோறும் மீனவப் பட்டதாரி இளைஞா்களுக்கு குடிமைப்பணிகளில் சோ்வதற்கான பிரத்யேக இலவசப் பயிற்சியளித்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி இப்பயிற்சியில் கடல், உள்நாட்டு மீனவக் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள், மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞா்கள் சோ்ந்து பயன்பெறலாம்.

பயிற்சிக்கான விண்ணப்பம், விவரங்களை இணையதளத்தில் பதிவிறக்கலாம் அல்லது திருச்சி மண்டல மீன்வளத்துறை துணை இயக்குநா் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் விலையின்றிப் பெறலாம்.

விண்ணப்பங்களை பூா்த்தி செய்து, மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவஞ்சலிலோ அல்லது நேரடியாகவோ வரும் 31 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குநா், எண். 4, காயிதே மில்லத் தெரு, காஜா நகா், திருச்சி - 20, (0431-2421173) என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT