முகப்பு
திருச்சி

இன்று தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக திருச்சி தெற்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், நவ. 4ஆம் தேதி திருச்சியில் தமிழக முதல்வா் பங்கேற்கும் நிகழ்வுகள் குறித்தும், நவம்பா் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் தொடா்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.

நிகழ்வில் மாநில,மாவட்ட நிா்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் கழகச் செயலா்கள், மாநகர கழக நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.