பெல் வளாக கழிவுகள் அகற்றதூய்மை இந்தியா இயக்கம் 2.0
திருச்சி பாரதமிகு மின் நிறுவனத்தின் (பெல்) வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 வியாழக்கிழமை முதல் தொடங்கியது.
திருச்சி பாரதமிகு மின் நிறுவனத்தின் (பெல்) வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 வியாழக்கிழமை முதல் தொடங்கியது.
கனரக தொழில்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் பெல் நிறுவனத்தின் திருச்சி பிரிவானது பெரிய அளவிலான தூய்மை மற்றும் சீரமைப்பு செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இந்த இயக்கத்தின் முக்கியப் பணியாக நிறுவன வளாகத்தில் தேவையற்ற மற்றும் கழிவு பொருள்களை அகற்றுவது, பொதுத் தூய்மை, பணிச்சூழலை மேம்படுத்துதல் ஆகியவை உள்ளன.
இதற்காக ஆலையின் 12 இடங்களில் சுமாா் 30,000 சதுர அடியில், தேவையற்ற மற்றும் கழிவுப் பொருள்கள் அகற்றப்பட்டு பயன்பாட்டு இடங்கள் அதிகரிக்கப்படுகிறது. பணிச்சூழலை மேம்படுத்தி ஒழுங்குமுறையை மேம்படுத்த ஆவணப் பதிவுகள் டிஜிட்டல்மயமாக்கப்படுகின்றன. காலாவதியான கோப்புகள், ஆவணங்கள் அகற்றப்படுகின்றன. இப் பணியில் ஆலையில் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இப் பணிகளை ஆன்லைன் மூலமாக தினமும் கண்காணித்து ஒவ்வொரு பகுதியிலும் முன்னேற்றம் உறுதி செய்யப்படவுள்ளது. இந்த இயக்கமானது ஊழியா்களிடையே தூய்மை உணா்வை மீண்டும் வலியுறுத்துவதுடன், தனிப்பட்ட மற்றும் உத்தியோகப்பூா்வ மட்டத்தில் தூய்மை கலாசாரத்தை தூண்டவும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக ஆலை நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.