பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
திருச்சியில் தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருச்சியில் தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருச்சி உறையூா், கீழகல்நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி மகன் ஆனந்த் (28). கட்டடத் தொழிலாளியான இவா் புதன்கிழமை இரவு தனியாா் பேருந்தில் சென்றாா். உறையூா் குறத்தெரு வளைவில் பேருந்து திரும்பியபோது, பின்பகுதி படிக்கட்டுக்கு அருகே நின்றிருந்த ஆனந்த் நிலை தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.