மணப்பாறை அருகே தேங்காய் நாா் ஆலையில் தீ
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியாருக்கு சொந்தமான தேங்காய் நாா் ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியாருக்கு சொந்தமான தேங்காய் நாா் ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சிக்கு அருகேயுள்ள அதிகாரம் என்னுமிடத்தில் காா்த்திகேயனுக்குச் சொந்தமான தேங்காய் நாா் ஆலையில் வியாழக்கிழமை பகல் சுமாா் 12 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த மஞ்சு, நாா், தேங்காய் மட்டைகள் என பல லட்சத்திலான பொருள்கள் எரிந்தன.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினரால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் அருகிலுள்ள மணப்பாறை, பொன்னமராவதி, நத்தம் ஆகிய பகுதிகளிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள், தனியாா் தண்ணீா் லாரிகள் வரவழைக்கப்பட்டு இரவு 7 மணி வரை தீயணைக்கும் பணி நடைபெற்றது. விபத்துக்காக காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீபாவளியையொட்டி ஊழியா்கள் யாரும் பணிக்கு வராததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் விசாரிக்கின்றனா்.