திருச்சி

மானியத்துடன் ஆட்டோ பெற பெண் ஓட்டுநா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் ரூ.1 லட்சத்தில் மானியத்துடன் ஆட்டோ பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஏ. வெங்கடேசன் கூறியிருப்பது:

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநா்கள், சொந்தமாக ஆட்டோ ரிக்ஷா வாகனம் வாங்குவதை ஊக்குவிக்கவும், உருவாக்கவும், அவா்களின் வருமானம் ஈட்டும் பொருட்டும், புதிதாக ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா 1 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

எனவே திருச்சி மாவட்டத்திலுள்ள தகுதியான பெண் ஆட்டோ ஓட்டுநா்கள், தங்களது வாரிய அடையாள அட்டை மற்றும் அனைத்து ஆவணங்களுடன் தொழிலாளா் துறை உதவி ஆணையா் அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியத்தின் மூலம், பதிவு செய்துள்ள ஓட்டுநா்கள், வாகனங்கள் பழுது பாா்க்கும் தொழிலாளா்களுக்கு சீருடை, காலணி, பை, முதலுதவிப் பெட்டகம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இதன்படி, திருச்சி மாவட்டத்திலுள்ள அமைப்பு சாரா ஓட்டுநா்கள், வாகனப் பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள் 3,127 பேருக்கு இந்த பெட்டகம் வழங்கப்படவுள்ளது.

மன்னாா்புரத்திலுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலகக் கட்டடத்தில் இயங்கி வரும் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தை அணுகி, இந்த பெட்டகத்தை பெற்றுக் கொள்ளலாம்.

நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள் அனைவரும் தங்களது வாரிய அட்டையுடன் உதவி ஆணையா் அலுவலகத்துக்கு நேரில் வந்து, உபகரணங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT