மயங்கி விழுந்த இசைக் கலைஞா் உயிரிழப்பு
திருச்சியில் மயங்கி விழுந்த இசைக்கலைஞா் உயிரிழந்தாா்.
திருச்சியில் மயங்கி விழுந்த இசைக்கலைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி பொன்மலைப்பட்டி ஜீவா தெருவைச் சோ்ந்தவா் த. குமாரவேல் ( 50). பேண்டு வாத்திய இசைக் கலைஞரான இவா், மனைவியைப் பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக தனியே வசித்து வருகிறாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென மயங்கி விழுந்த குமாரவேலுவை அவரது உறவினா்கள் மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்த போது, ஏற்கெனவே குமாரவேல் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.