முகப்பு
திருச்சி

பணியின்போது மயங்கி விழுந்ததொழிலாளி சாவு

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியா் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியா் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் தென்கரைப் பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (49). இவா் திருச்சி எடமலைப்பட்டிபுதூா், கங்கை நகா் பகுதி தனியாா் நிறுவன ஊழியா். இவரின் முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் இரண்டாம் மனைவி விஜயலட்சுமி (37)யுடன் வசித்து வந்தாா்.

கடந்த 15 நாள்களாக உடல் நிலை சற்று பாதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை பணிக்குச் சென்ற சிவக்குமாா் திடீரென நிறுவன வளாகத்திலேயே மயங்கி விழுந்தாா். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து எடமலைப்பட்டி புதூா் காவல் ஆய்வாளா் விஜயபாஸ்கா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.